
மத்திய பிரதேசம் மாநிலத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஆம்புலன்ஸில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த இளம் பெண் சிறுமியாக இருந்தபோது கடந்த 2015 ஆம் ஆண்டு 4 பேர் மீது பாலியல் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி சோட்டு ரெய்க்வார், புஷ்பேந்திர தாக்குர், விஷால்தாக்குர், ஆசாத் தாக்குர் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர்கள் இளம்பெண்ணிடம் புகாரை வாபஸ் பெறுமாறு கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் வாபஸ் பெற மறுத்துவிட்ட நிலையில் கடந்த வருடம் இளம் பெண் மற்றும் அவருடைய தாயாரை அடித்து துன்புறுத்தியதோடு இளம்பெண்ணின் தாயாரை நிர்வாணப்படுத்தியது. இதை தடுக்க வந்த இளம் பெண்ணின் சகோதரர் நிதின் அகிர்வாரை அவர்கள் அடித்துக் கொலை செய்தனர். இதைத்தொடர்ந்து 9 மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்தனர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு முக்கிய சாட்சியாக இருக்கும் இளம்பெண்ணின் தாய் மாமாவிடம் பப்பு ராஜக் என்பவர் வழக்கை வாபஸ் பெறும்படி கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் இளம்பெண்ணின் தாய் மாமா இறந்துவிட்ட நிலையில் பப்புவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் தண்டு குரேஷி, பகீம் கான், இஸ்ரேல் பீனா, பப்லு பீனா, ஆஷிக் குரேஷி ஆகிய 5 வேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் தன்னுடைய தாய் மாமாவின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வரும்போது திடீரென ஆம்புலன்ஸிலிருந்து கீழே குதித்து விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த இளம் பெண் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருவதால் மோடி அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது.