ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா அணி வென்ற நிலையில் அந்த அணியில் இடம்பெற்ற ரிங்கு சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் மூலம் அவர் டி20 உலக கோப்பை போட்டுயிலும் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் ரிங்கு சிங் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது கொல்கத்தா அணியின் இடம்பெற்றிருந்த மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார்.

ஆனால் நீங்கள் வெறும் 55 லட்ச ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளீர்கள். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு ரிங்கு இந்த பணம் கூட இல்லாமல் நான் தவித்த நாட்களும் இருக்கிறது. என்னை பொருத்தவரை 55 லட்சம் என்பது மிகப்பெரிய பணம். அதை நான் மிகவும் மகிழ்ச்சியாக பெற்றுக்கொள்வேன். நான் சிறுவனாக இருக்கும்போது 10 இல்லனா 15 ரூபாய் கிடைச்சாலே எனக்கு ரொம்ப பெருசா தெரியும். அப்படி இருக்கும்போது எனக்கு தற்போது 55 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இந்த பணமும் இல்லாத போது தான் நான் பணத்தின் அருமையை தெரிந்து கொண்டேன். மேலும் எப்போதும் நம்மிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.