இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். போலியான பரிசுகள் வழங்குவது, ஏடிஎம் கார்டு லாக் ஆகி உள்ளது என்று கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர். சில மோசடி நிறுவனங்கள் பொது மக்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்கின்றன.

அந்த நிறுவனங்களுக்கு தடை விதித்து ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது தொலைத் தொடர்பு துறை நடத்திய ஆய்வில், மூன்று மாதங்களில் 8 குறுஞ்செய்தி தலைப்புகள் மூலம் 10,000 மேற்பட்ட மோசடி குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனங்களை தொலைத்தொடர்புத்துறை Block list செய்துள்ளது. இது போன்ற மோசடிகளை தடுப்பதற்கு பெறப்படும் மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து “சஞ்சாய் சாதி” இணையதளத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.