PRAVAAH இணையதளம், RBI Retail Direct மொபைல் செயலி மற்றும் ஃபின்டெக் ரிபோசிட்டரி ஆகிய வசதிகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. PRAVAAH  தளத்தின் மூலமாக தனிநபர் அல்லது நிறுவனங்கள் பல்வேறு ஒப்புதல்களுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும். RBI Retail Direct  செயலி மூலம் முதலீட்டாளர்கள் அரசு கடன் பத்திரங்களில் நேரடியாக முதலீடு செய்யலாம். ஃபின்டெக்  துறையின் பல்வேறு தகவல்களை ஃபின்டெக்  தரவு தளத்தில் பெறலாம்.