வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில் பணம் இல்லையெனில் அபராதம் விதிக்கக் கூடாதென வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதை மீறும் வகையில், YES BANK தனது வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதையடுத்து அதற்கு ரூ.91 லட்சமும், கடனுதவி தொடர்பான விதி மீறலுக்கு ICICI வங்கிக்கு ரூ.1 கோடியும் RBI அபராதம் விதித்துள்ளது. இரு வங்கிகளும் 2022ஆம் நிதியாண்டில் விதிமீறலில் ஈடுபட்டுள்ளன.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மீறும் வகையில், போதுமான அல்லது பூஜ்ஜிய இருப்பு இல்லாத சில சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலித்ததால், யெஸ் வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.