ஜூன் 1ஆம் தேதி உலகக்கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஐபிஎல் தொடரில் இருந்து விடைபெற்ற இந்திய அணி வீரர்கள் 2 நாட்களுக்கு முன்பாக அமெரிக்கா சென்றார்கள். இதில் முக்கியமாக அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. ஏற்கனவே அவர் தன் மனைவியை இவர் பிரிய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதனை தொடர்ந்து அவர் இந்திய அணியுடன் பயணம் செல்லாததால் இந்த தொடரில் விலகுகிறாரா? என்று கருத்துக்கள் அதிகரித்தது . மும்பை அணி வெளியேறிய பிறகு தனியாக வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த ஹர்திக் நேற்று முன்தினம் மதியம் இந்திய அணியுடன் நியூயார்க் நகரில் இணைந்தார் என்று கூறப்படுகிறது. அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முக்கிய ஆல்ரவுண்டராக இடம்பெற்றார் ஹர்த்திக். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான பங்களிப்பை கொடுக்காவிட்டாலும் இவர் போன்ற ஒருவர் இடம் பெறுவது முக்கியமானதாகும்.