
வாட்ஸ்ஆப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மின் வாரியத்தின் எண்ணிற்கு “HI” என பலரும் மெசேஜ் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், மீட்டர் ரீடிங் எடுத்தவுடன், 500 யூனிட் மேல் உள்ளவர்களுக்கு மின்கட்டண லிங்க் அனுப்பப்படும். , நுகர்வோர் தங்களுடைய மின்இணைப்போடு வாட்ஸ்-அப் வசதியுடன் கூடிய செல்போன் எண்ணை இணைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் மின்கட்டண விவரம் அனுப்பி வைக்கப்படும். நுகர்வோர் தங்களுடைய வாட்ஸ் அப்பில் யுபிஐ மூலமாக மின்கட்டணத்தைச் செலுத்தலாம். இது நுகர்வோரின் வரவேற்பைப் பொறுத்து மேம்படுத்தப்படும். எனவே, WhatsApp எண்ணில் Hi என ‘பேச’ முயற்சிக்க வேண்டாம் என்று மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.