CSK அணிக்கு எதிரான 68ஆவது லீக் போட்டியில், RCB அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. ரஹானே, சான்ட்னர் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம்,ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு RCB அணி செல்லும் வாய்ப்பை உறுதிசெய்தார்.

இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருந்தாலும், சிஎஸ்கே அணியின் வீரர்கள் இறுதிவரை போராடி ஆர்சிபி அணிக்கு பயத்தைக் காட்டினர். குறிப்பாக, ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தல (தோனி), தளபதி (ஜடேஜா) இணைந்து 61 ரன்கள் குவித்தனர். இதனால், கடைசி ஓவர் வரை இரு அணி ரசிகர்களும் நகங்களை கடித்துக் கொண்டிருந்தனர். இறுதியாக 19.2ஆவது பந்தில் தோனி அவுட் ஆனார்.