பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துவரும் “வீரதிர சூரன்” படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில், சம்பவம் லோடிங் என தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வன்முறையை தூண்டும் விதமாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
