உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்ததுடன் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மேகி உணவை சமைத்து சாப்பிட்ட நிலையில் அனைவருக்கும் வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனைவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற குடும்ப உறுப்பினர்கள் தற்போது நலமாக உள்ள நிலையில் சிறுமியின் மரணத்திற்கு என்ன காரணம் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.