
குஜராத் மாநிலம் அல்தான் பகுதியில் 50 மாணவர்களுடன் பயணித்த தனியார் பள்ளி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பேருந்தில் இருந்த ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பயத்தில் அலறிய நிலையில் சிலர் காயமடைந்தனர். இந்த நிலையில் ஓட்டுநர் மது போதையில் இருப்பது அறிந்ததை அடுத்து, பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் ஓட்டுநரை வலுக்கட்டாயமாக பேருந்தை நிறுத்த செய்து மாணவர்களை காப்பாற்றினார். மாணவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.