2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார்.  அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அவ்வகையில் , நுண்ணுயிர் பாசனம் அமைக்க 773.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பத்தாயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி மேற்கொள்ள ஏழு லட்சம் தரமான தென்னை நாற்றுகள் விநியோகம் செய்யப்படும்.