தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ராமர் கோவிலை வெறுப்பவர் மற்றும் சனாதன தர்மத்தை எதிர்ப்பவர் என்று பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர். இந்த நிலையில் அதற்கு இந்தி தெரியாது போடா என்ற டி-ஷர்ட் அணிந்த புகைப்படத்தை பதிவிட்டு ஸ்மைலி உடன் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவிற்கு பலரும் தங்களுடைய ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.