
ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ரயில் சேவையை அதிகரித்து அதிகாரிகள் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மூன்று பெட்டிகளுடன் இயக்கப்படும் ரயில் குன்னூரில் மேலும் இரண்டு பெட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி மாதம் 21, 26, 28 ஆகிய தேதிகளிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 18 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும் இந்த சேவைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.