
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக கனவு ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்த அவர்களின் தொழிற்சார் அறிவிப்பு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான போட்டி இந்த ஆண்டு மூன்று நிலைகளாக நடத்தப்பட்டது.
இதில் 350 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதில் 55 பேர் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர். அவர்கள் வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது அளிக்கப்பட உள்ளதுடன் அவர்களின் திறன் மேம்பாட்டுக்கு உரிய வாய்ப்புகளும் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.