செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன்  மத்திய அரசு, மாநில அரசு இணைந்து தான் பல்கலைக்கழகங்களை நடத்துகிறார்கள். அது மட்டுமல்ல, நீங்க உங்களோட செயலாளரா இருப்பாரு, மாவட்ட செயலாளரா இருப்பாரு, அப்புறம் அவரை துணை வேந்தரா ஆக்குவிங்க.

ஆக, மறுபடியும் முதலமைச்சர்கள் கிட்ட, இந்த துணைவேந்தர்கள் குடுக்கின்ற ஆற்றல் சென்றது என்றால், உரிமை சென்றது என்றால், மாவட்ட செயலாளராக இருப்பாங்க… அவங்க துணைவேந்தரா வருவாங்க, அப்புறம் ஊழல் செய்ய ஆரம்பிப்பாங்க. அதனால, வேந்தரா கவர்னர் இருக்கிறது தான் சரி, இல்லனா அப்படியே அரசியல் சாயம் பூசப்பட்டு விடும். இதற்கு முன்னால சரித்திரங்கள் இதை சொல்கிறது.

மாவட்ட செயலாளரா ஆக ஒரு கட்சியில் இருந்துட்டு, அவங்கள துணைவேந்தர் ஆக்குவாங்க, அப்புறம் எப்படி நடுநிலையா செயலாற்றுவாங்க. அதனால, இன்னொன்னு முதலமைச்சராய் வேந்தரா இருந்தா தான் நான் இதெல்லாம் செய்ய முடியும், அப்படின்னு சொல்றதெல்லாம் தப்பு.

முதலமைச்சர் தான் பல்கலைக்கழகங்கள்  உயர் கல்வித் துறை அமைச்சரும் அதற்கு பொறுப்பாளராக இருக்கிறாரு. அதனால, நான் வேந்தரா இருந்தா தான், என்னால நேரடியா உதவி செய்ய முடியும், இல்லனா உதவி செய்ய முடியாது என்று சொல்வது தவறு. அந்தத் தவறை செய்யக்கூடாது என்பது என்னுடைய கருத்து என தெரிவித்தார்.