
370 நாட்களுக்கு முன்பு பாட் கம்மின்ஸ் ஒரு கடினமான முடிவை எடுத்து, ரூ. 7.25 கோடியை விட்டுவிட்டு ஆஸ்திரேலிய அணியை உலக சாம்பியனாக்கினார்..
2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் 3வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் இந்திய அணியின் கனவு தகர்ந்துள்ளது. அதோடு இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. கடினமான முடிவுகளை எடுக்கும்போது வாழ்க்கையில் இது போன்ற பல திருப்பங்கள் வரும்.. அந்த நேரத்தில் இந்த முடிவு கடினமாகத் தோன்றலாம்.. ஆனால் எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம். ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸுக்கும் அப்படித்தான் நடந்தது. நவம்பர் 15, 2022 அன்று, கம்மின்ஸ் ஒரு கடினமான முடிவை எடுத்தார். 370 நாட்களுக்குப் பிறகு அதற்கு அவருக்கு பலன் கிடைத்தது. இவரது தலைமையில் ஆஸ்திரேலியா 2023 உலகக் கோப்பையை வென்றது.
கம்மின்ஸ் ஐபிஎல்லில் இருந்து விலகினார் :
பாட் கம்மின்ஸ் ஐபிஎல் 2022 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். பேட் மற்றும் பந்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் நவம்பர் 15, 2022 அன்று, கம்மின்ஸ் ஐபிஎல் 2023 இல் விளையாட மாட்டேன் என்று ட்வீட் செய்தார். ஐபிஎல் சீசனில் விளையாடியதற்காக கம்மின்ஸ் ரூ.7.25 கோடி பெறுகிறார். கம்மின்ஸ் தனது பதிவில், ‘அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் இருந்து விலகுவது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். சர்வதேச அட்டவணை அடுத்த 12 மாதங்களுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளால் நிரம்பியுள்ளது, எனவே ஆஷஸ் தொடர் மற்றும் உலகக் கோப்பைக்கு முன் சிறிது ஓய்வு எடுக்கப்படும்” என தெரிவித்தார். அந்த பழைய ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.
ஐபிஎல்லுக்குப் பிறகுஉலக கோப்பை சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா :
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் டைட்டில் போட்டி ஐபிஎல் முடிந்த உடனேயே நடைபெற்றது. இதிலும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே போட்டி நிலவியது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அங்கேயும் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக கம்மின்ஸ் இருந்தார். இதன் பிறகு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து சென்று விளையாடிய ஆஸ்திரேலியா 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது..
இப்போது உலகக் கோப்பை பட்டம் :
ஆஸ்திரேலியா இப்போது 2023 உலகக் கோப்பையை பாட் கம்மின்ஸ் தலைமையில் வென்றது. கம்மின்ஸ் பேட் மற்றும் பந்தில் முக்கிய பங்களிப்பை வழங்கினார். அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 விக்கெட்டுகளையும், அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் 14 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடினமான சூழ்நிலையில், 68 பந்துகளை சந்தித்து கிரீஸில் இருந்தார். அரையிறுதியில் கூட ஆட்டமிழக்காமல் 14 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
Pat Cummins on 15th November 2022 decided to skip the IPL for Ashes and World Cup.
Pat Cummins on 19th November 2023 – Won the World Cup after drawing the Ashes. pic.twitter.com/JRX8wQ96tT
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 19, 2023