நாகை மாவட்டத்திற்கு நவம்பர் 17ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிக்கல் சிங்காரவேலர் கோவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நவம்பர் 17ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கோவில் விழா காரணமாக விடுமுறை விடுக்கப்பட்டது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.