உத்திரபிரதேசம் மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்து வகுப்பறையில் தூங்கி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடக்கப்பள்ளி ஆசிரியரான அவர் தலைக்கேறிய போதையில் நிற்க முடியாமல் வகுப்பறையில் சேரில் அமர்ந்தபடி தூங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் அலாக்சிங், சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.