ரபி பருவத்தில் உரம் மானியமாக 22,303 கோடியை விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இந்திய நாட்டு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த மானியத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நைட்ரஜன் 47.2 ரூபாய் கிலோவுக்கும் , பாஸ்பரஸ் 20.82 ரூபாய் கிலோவுக்கும், பொட்டாஷ் 2.38, கந்தகம் 1.89 ரூபாய் கிலோவுக்கும், டி ஏ பி ஐ 1.89 ரூபாய்க்கும் பெறலாம். இதனைத் தவிர வேறு சில உரங்களுக்கும் இந்த மானியம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.