ஆரியன் என்பவர் பிலிப்கார்ட்டில் ஒரு லட்சம் மதிப்பிலான sony டிவியை அக்டோபர் 7 அன்று ஆர்டர் செய்துள்ளார். அக்டோபர் 10 அன்று அவரது டிவி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அக்டோபர் 11 அன்று டிவியை பொருத்தும் டெக்னீசியன் வரும் வரை பார்சலை பிரிக்காமல் வைத்துள்ளனர். டெக்னீசியன் வந்து டிவி இருந்த அட்டைப்பெட்டியை திறந்த போது ஆரியன் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார். சோனி அட்டை பெட்டியில் தாம்சன் டிவி இருந்துள்ளது.

மேலும் டிவி ஸ்டாண்ட் மற்றும் ரிமோட் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் ஏமாந்து போன ஆரியன் டிவியை ரிட்டன் போடுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் அதற்கும் சரியான பதில் இல்லை என்று தனக்கு ஏற்பட்ட இந்த நிலையை ட்விட்டர் பக்கத்தில் flipkart நிறுவனத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த பிளிப்கார்ட் நிறுவனம் மன்னிப்பு கேட்டு தீர்வு காண்பதாக கூறியுள்ளது.