
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 14 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டு அந் நாட்டு மக்களுடன் அமெரிக்க துணை நிற்கும் என்று உறுதியளித்திருந்தார். இந்நிலையில் ஜோ பைடன் அவர்கள் தொலைக்காட்சியில் உரையாற்றிய போது இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் குறித்து பேசி உள்ளார்.
அதில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை ஏற்க முடியாதது போல் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. நிச்சயமாக ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகள் வெற்றி பெற விடமாட்டோம். அதேபோன்று ரஷ்ய அதிபரும் வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம் இருவருமே அண்டை நாட்டின் ஜனநாயகத்தை வேரோடு அழிக்க விரும்புகிறார்கள். உக்ரைன் இஸ்ரேலுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு இந்த வருடத்தில் இருந்து அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.