
மக்னா யானை மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘இயற்கையின் சமநிலைக்கும் காட்டை உருவாக்குவதற்கும் யானைகளின் பங்கு அதிகம். நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மக்னா யானை மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. யானையை வளர்த்து பராமரித்த யானைப்பாகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். யானைகளின் நலனைக் காப்போம், இயற்கை காப்பாற்றுவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.