
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என நடிகை விஜயலட்சுமி கண்ணீர் மல்க நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற விஜயலட்சுமி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், சீமான், தன்னை திருமணம் செய்தது உண்மைதான்.
அவரால் அவமானப்பட்டு இங்கு வந்து நிற்கிறேன். அவரை கைது செய்யும் வரை என்னுடைய போராட்டம் தொடரும் எனக் கூறிய அவர், அதிமுக ஆட்சியில் சீமானை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் சீமான் என்னுடன் அரை நிர்வாணமாக இருந்த வீடியோக்களை ஆணையரிடம் கொடுத்து இருக்கிறேன். அதில் அவர் என்னை மனைவி என்று அழைத்திருக்கிறார். என்னை ஏமாற்றிய சீமானை கைது செய்ய வேண்டும்” என்றார்