புவிசார் குறியீடு என்பது ஒரு கலை, கலைப் பொருள், அதன் செய்முறை, விவசாய பொருள் என எதற்கும் வழங்கப்படும். அது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரியது ஆகும். அதன்படி திருநெல்வேலி அல்வா, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்ட பலவற்றிற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சேலம் சேகோவும் தற்போது இணைந்துள்ளது. இதன் மூலம் அங்குள்ள ஜவ்வரிசிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஜவ்வரிசியானது மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்படுவதால், பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் மதிப்பும் அதிகரிக்கும்.
