
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் வாடகை கார்கள், பைக் சேவைகளை வழங்கி வருகிறது. அதைப்போல ஸ்விக்கி, சோமெட்டோ நிறுவனங்களும் உணவு டெலிவரி சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியிலும் உடனே டெலிவரி செய்தால் தான் இன்சென்ட்டடிவ் தொகை கிடைக்கும். இவ்வளவு பணிசுமைகளுக்கு மத்தியிலும் பணியாற்றி வருகிறார்கள்.
ஆனாலும் பணியிட பாதுகாப்பு, பணி நிரந்தரம் எதுவும் இவர்களுக்கு கிடையாது. இந்த நிலையில் இந்த ஊழியர்களுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மு க ஸ்டாலின் நல்ல செய்தி ஒன்றை அறிவித்துள்ளார். இவர்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பணிபுரிவார்கள். நேரத்தின் அருமை கருதி பணியாற்றும் இவர்களுடைய வாழ்க்கை மிகவும் முக்கியமானது.
எனவே அவர்களுடைய ஒட்டுமொத்த நலன் கருதி நல வாரியம் என்று அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதாவது டெலிவரி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பணிக்காலத்தில் இறந்தால் நிவாரண தொகை, திருமண உதவி தொகை, கல்வி உதவித்தொகை அரசு காப்பீடு திட்டம் ஆகியவையும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.