
வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் சிகப்பு நிறத்தில் இருப்பதற்கே சில முக்கிய காரணங்கள் உள்ளன. பொதுவாக சிவப்பு என்பது அபாயத்தை குறிக்கும். ஆபத்து உள்ள இடங்களில் சிவப்பு துணி அல்லது பலகை பயன்படுத்தப்படுகின்றது. அவ்வகையில் கேஸ் சிலிண்டரும் ஆபத்தான ஒன்றுதான். ஏனென்றால் அதில் எரியக்கூடிய வாயு உள்ளது. கொஞ்சம் நாம் கவனமாக இல்லாவிட்டாலும் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும். இதனால்தான் சிவப்பு நிறம் கேஸ் சிலிண்டருக்கு குறிக்காட்டியாக பயன்படுத்தப்படுகின்றது. சிவப்பு நிறம் எந்த தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.