
விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது விறுவிறுப்பான கதை கலத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையாக நடித்து வரும் சத்யா தேவராஜன் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நடிகர் தனுஷ் நவரச நாயகனா மாதிரி ப்ரபோஸ் செய்திருப்பார். 2015 ஆம் வருடம் அநேகன் பட குழுவினர் ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் கேள்வி கேட்டு உரையாடுவது போல நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறது. இதில் கலந்துகொண்ட ஆதிரை சினிமாவைப் போல நிஜத்தில் இருந்திருக்கும் யாருக்காவது உங்கள் ஸ்டைலில் ப்ரபோஸ் செய்ய வேண்டும் என்ற சொல்ல அதற்கு தனுஷ் நவரச நாயகன் போல பேசி ப்ரபோஸ் செய்த காட்சியானது தற்போது வைரலாகி வருகிறது
View this post on Instagram