நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் மெயின் ரோட்டில் ஆர் என் ஆக்ஸ்போர்ட் என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 24 வருடங்கள் முடிவடைந்த நிலையில் 25 ஆவது வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10 வருடத்திற்கு மேல் இந்த பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களை பெருமைப்படுத்த அவர்களுக்கு இலவச சுற்றுலா  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அவர்களுக்கு இலவசமாக விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. மேலும் விமானத்தில் திருச்சியில் இருந்து சென்னை வரை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 28 ஆசிரியை ஆசிரியர்கள் பயணம் சென்றார்கள். சென்னையில் பல பகுதிகள் அவர்களுக்கு சுற்றி க்காட்டப்பட்டு பின்பு படுக்கை வசதியுடன் கூடிய ஏசி சொகுசு பேருந்தில் பயணம் செய்து பள்ளிக்கு வந்தார்கள். இதனுடைய முழு செலவும் பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.