இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் நம்மை சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். பொதுவாகவே நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு. நாம் ஆச்சரியப்படும் பல விஷயங்களை செய்து நாய்கள் நம்மை அசத்தும். சமீபத்தில் நாயின் ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் நாய் ஒன்று சாலையில் குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு உதவி செய்துள்ளது. குப்பைகள் நிறைந்த பையை பெண் ஒருவர் தூக்கி செல்லும் நிலையில் அவருடன் குப்பைகள் இருக்கும் மற்றொரு பையை நாய் ஒன்று இழுத்துச் செல்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.