
பழங்குடியினர் இளைஞர் ஒருவர் மீது பாஜக பிரமுகர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவமானது நாடு முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்த பழங்குடி இளைஞரை வீட்டுக்கே வரவழைத்து அவருடைய கால்களை கழுவி விட்டு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்திலிருந்து மீளாத நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த தலித் சமூக இளைஞர் ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த நபர் தன்னுடைய செருப்பை நக்க சொல்லி துன்புறுத்தியுள்ள உள்ள வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆறாம் தேதி ராஜேந்திர சாமர் எனும் தலித் இளைஞர் தன்னுடைய தாய் மாமன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த மின்துறை ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் தேஜ்பால் சிங் படேல் அவரை சாதி பெயரை சொல்லி திட்டி அவமானப்படுத்தியுள்ளார். அதன் பிறகு தேஜ் பால் சிங் தன்னுடைய காலனியை நக்க சொல்லியும் மன்னிப்பு கேட்கச் சொல்லியும் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனையடுத்து தலித் இளைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேஜ்பால் சிங் படேல்லை கைது செய்துள்ளார். மேலும் அவரை மின்துறை பணியிலிருந்து நீக்கம் செய்தார்கள்.