மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் டெல்லியில் பைக் ரைடர்களுடன் பைக் ரைடு செய்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோட்டோ ஜிபி என்பது உலகின் பிரபலமான பைக் ரேஸ் ஆகும். இந்த பந்தயம் இந்தியாவின் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் செப்டம்பர் 22 முதல் 24 வரை நடைபெறும். இந்த போட்டியில் பெரும்பாலான இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் நடைபெறும் இந்த நிகழ்வு ரசிகர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கும் மிக முக்கியமான மைல்கல். இதனால் இந்த போட்டிக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று சனிக்கிழமை டெல்லியில் பைக் ரைடர்களுடன் பைக் ரைடு செய்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், நாட்டில் முதல்முறையாக இதுபோன்ற ஒரு பெரிய நிகழ்வு நடக்கிறது, இது ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த உதவும். “மோட்டோ ஜிபி இந்தியாவில் முதன்முறையாக நடைபெற உள்ளது. இந்தியாவின் கவுதம் புத் நகரில் இந்த மாபெரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

முதல் முறையாக மோட்டோ ஜிபி பந்தயத்தில் இந்திய ரேசர் ஒருவர் பங்கேற்கிறார். இப்போது பந்தய பைக்குகளுக்கு ஊக்கம் கிடைக்கும். எங்கள் ஆட்டோமொபைல் துறையும் அதிக ஊக்கத்தை பெறும். இது ஒரு பெரிய முயற்சியாக இருக்கும்… இது ஒரு ஆரம்பம் தான், பந்தயத்தில் இந்தியா புதிய உயரங்களை எட்டும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று அனுராக் தாக்கூர் கூறினார்.

https://twitter.com/ANI/status/1677604025548832768