சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி காவல் நிலையத்தில் பவித்ரன் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அதே காவல் நிலையத்தில் வேலூரை சேர்ந்த 26 வயதான பெண் போலீஸ் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பவித்ரன் தனக்கு திருமணமானதை மறைத்து பெண் போலீசை காதலித்து நெருக்கமாக பழகியுள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண் போலீசுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனால் இளம்பெண் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதனையடுத்த தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதற்கு பவித்ரன் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குடும்பம் இருக்கிறது என கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் செம்பியம் அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் விசாரணை நடத்தி பவித்திரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.