
பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் வெடித்த கலவரம் தொடர்ந்து பல நாட்களாக நீடித்து வருகிறது. மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை தொடர்ந்து மெய்ட்டி மற்றும் குக்கி இனமக்களிடையே வன்முறை வெடித்ததில் இதுவரை 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார். இதனிடையே மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிஷ்ணுபூர் பகுதியில் ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.