
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு மேற்கொண்டு இருந்த 6 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்திற்கு இடையே பல முக்கியமான ஒப்பந்தங்களானது கையெழுத்தாகி இருக்கிறது.
இந்தியா திரும்பிய பிரதமரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கட்சி எம்பிக்கள் கவுதம் காம்பீர் ஆகியோர் வரவேற்றனர். வெளிநாட்டுப் பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, இந்தியாவில் என்ன நடக்கிறது? என பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பிற தலைவர்களிடம் கேட்டறிந்தார்.