
பத்து தல திரைப்படத்தை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி டைரக்டு செய்யும் படத்தில் சிம்பு நடிக்கிறார். இந்த படத்தை அடுத்து சிம்பு நடிக்கும் 49-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜ் இயக்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிம்பு நடிக்கும் 50-வது படத்தை மணிரத்னம் இயக்குவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த திரைப்படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ்தான் தயாரிக்கிறது. இதற்கு முன் மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இது சிம்புவின் 50-வது படம் என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.