தரமற்ற மின் சாதனப் பொருட்களால் ஏற்படும் விபத்துகளை குறைக்க DPIIT உடன் இணைந்து மத்திய அரசு அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளது. அதன்படி, வீடு & வணிக பயன்பாட்டுக்கான அனைத்து மின் சாதனப் பொருட்களை கட்டாய தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் கொண்டுவந்துள்ளது. இப்புதிய நடைமுறையின் கீழ் BSI முத்திரை இல்லாத ஷேவர் உள்ளிட்ட மின் சாதனங்களை வர்த்தகம் செய்யவோ, இருப்பு வைக்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

தரமற்ற மின்சார பொருட்களினால் ஏற்படும் விபத்துகளை குறைக்கவும், தரமற்ற பொருட்களுடைய இறக்குமதியை கட்டுப்படுத்தும் விதமாகவும் உள்நாட்டு தொழில் துறையை மேம்படுத்தும் விதமாகவும் இந்த தர கட்டுப்பாட்டு விதிமுறையை கொண்டுவர அரசு முடிவு எடுத்து இருக்கிறது. இந்த வரைவு முத்திரையின்படி ஒரு பேஸ் அல்லது மூன்று பேஸ் மின்னழுத்தம் கொண்ட வீடு அல்லது வணிக பயன்பாடுகளுக்கான மின்சாதன பொருட்களுக்கு தர கட்டுப்பாட்டு விதிமுறைகள் பொருந்தும். மின்சாரத்தில் இருக்கக்கூடிய வேக்கம் கிளீனர், ஷேவர், மசாஜ் சாதனங்கள், ஸ்டீம் குக்கர்கள், காபி மேக்கர்களும் இதில் அடங்கும்.