
வாஷிங்டன் டிசியிலுள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தொழில் துறை வல்லுநர்களுக்கு நிம்மதி தரும் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமருக்கு பலரும் நன்றி தெரிவித்தனர்.
அதாவது, அமெரிக்காவில் பணிபுரிய வந்திருக்கும் தொழிற்துறை பணியாளர்கள், இனி பணி விசாவை புதுப்பிக்க வெளிநாடு போக வேண்டியதில்லை. பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் அமெரிக்க நாட்டின் புது தூதரகங்களானது திறக்கப்படும். ஆகவே எச்1பி விசாக்களை அமெரிக்காவிலேயே புதுப்பித்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலருக்கும் நிம்மதியை கொடுத்திருக்கிறது.