நாடு முழுவதும்  ஜூன் 1ஆம் தேதி முதல் இ-பைக்குகளுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2019 முதல் இரண்டு ஆண்டுகளாக மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி தற்போது இ-பைக்குகளின் மின்கலன் திறனை பொறுத்து 15 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பத்தாயிரம் ரூபாயாக குறைக்கப்பட உள்ளது.

இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் மின்சார வாகனங்களின் விலையை நிறுவனங்கள் தற்போது உயர்த்தியுள்ளன. ஓலா, டிவிஎஸ் மற்றும் ஏதர் எனர்ஜி ஆகியவை ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தியுள்ளன. அதன்படி tvs 17 ஆயிரத்திலிருந்து 22 ஆயிரம் ரூபாயாகவும், ஏதர் மற்றும் ஓலா வாகனங்களின் விலையை 8000 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது. இதனால் விலை 15 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.