தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர் ஆவார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் வெளியாகிய மேயாதா மான் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அண்மையில் இவர் நடிப்பில் ருத்ரன், பத்து தல என 2 படங்கள் வெளியாகியது. இந்த 2 திரைப்படத்திற்கும் மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

பிரியா பவானி சங்கர் சோஷியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்து உள்ளார். இப்போது அவர் தன் காதலர் ராஜவேலுவுடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.