ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் என்ற மாவட்டத்தில் சோரப்ளாக் பேண்ட் சாஹி கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறார்களுக்கு நாய்களுடன் திருமணம் நடத்தப்பட்டது. அங்குள்ள 11 வயது சிறுவனுக்கு பெண் நாயுடனும் 7 வயது சிறுமிக்கு ஆண் நாயுடனும் திருமணம் நடைபெற்று உள்ளது. தீய சக்திகளை விரட்ட தெரு நாய்களுடன் சிறார்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள ஹோபழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளின் மேல் தாடையில் முதல் பல் முளைப்பதை துரதிஷ்டவசமான ஒன்றாக பார்க்கின்றனர். மேலும் தீய சக்திகளை விரட்ட குழந்தைகளுக்கு நாய்களுடன் அவர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர்.
