பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் மற்றொரு பரபரப்பு முடிவை எடுத்துள்ளது. அதாவது அந்நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ் அப் மட்டும் இன்ஸ்டாகிராமில் இருந்து சுமார் 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. நிறுவனத்தின் நிதி வருவாயில் முன்னேற்றம் இல்லாததால் செலவு குறைப்பின் ஒரு பகுதியாக பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது. புதன்கிழமை வேலை நீக்கம் அறிவிப்புகளை வெளியிட தயாராகுமாறு மேலாளர்களுக்கு அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மார்க் ஜுக்கர்பெர்க் ஏற்கனவே 10,000 ஊழியர்களை நீக்கப்படுவார்கள் என மார்ச் மாதம் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக வரும்  மே மாதத்தில் அடுத்தக்கட்ட பணி நீக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது.