உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தொடர்ந்து ஆறாவது வருடமாக பின்லாந்து முதலிடம் பெற்றது. இந்த பட்டியலில் இந்தியாவானது 125 வது இடத்தை பிடித்தது. கால் அப் வேர்ல்ட் போல் நிறுவனம் தயாரித்த தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது. மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தி இந்த அறிக்கையானது தயாரிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலங்கள் குறித்த பட்டியல் தயாரிக்க குருகிராமில் உள்ள மேலாண்மை மையம் குடும்ப உறவுமுறைகள், உடல் மற்றும் மனநலம், வேலை சார்ந்த பிரச்சனை, சமூக பிரச்சனை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தியது. மேலும் இது குறித்து  ஹரியானா மாநிலம் குருகிராமில் செயல்படும் நிர்வாக மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ராஜேஷ் கே பில்லானியா தலைமையிலான குழுவினரும்  ஆய்வு மேற்கொண்டனர். இதில், மிசோரம் மாநிலம் மகிழ்ச்சியான மாநிலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 100% கல்வியறிவு பெற்ற 2வது மாநிலமாகவும் மிசோரம் உள்ளது. மிசோரமின் சமூக அமைப்பும் இளைஞர்களின் திருப்திக்கு பங்களிப்பதாக ஆய்வு கூறுகிறது.