தமிழகத்தில் பெண்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தாலிக்கு தங்கம் என்ற நிதியுதவி திட்டம் மூலம் பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், 50,000 ரூபாய் ரொக்கம் தமிழக அரசு வழங்கி வந்தது. இத்திட்டத்தை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம் என மாற்றி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக  2023-24 ஆம் நிதியாண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு உயர் கல்வியை தொடர மாதம் 1,000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.