
டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உட்பட பலர் நடிப்பில் சென்ற 2021-ம் வருடம் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டடித்த படம் “புஷ்பா”. தெலுங்கு மொழியில் உருவான இப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்போது இந்த படத்தின் 2-ஆம் பாகமான “புஷ்பா-தி ரூல்” படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது.
அண்மையில் நடிகர் அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு “புஷ்பா-தி ரூல்” படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவானது வெளியிட்டது. தற்போது இந்த வீடியோ யூ டியூபில் 64 மில்லியன் பார்வையாளர்களையும் 2.48 மில்லியன் லைக்குகளையும் குவித்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. இதை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கிறது.
It is Icon Star @alluarjun's Blockbuster RULE 🔥🔥#Pushpa2TheRule Glimpse trending all over with 64M+ views and 2.48M+ likes 💥💥
– https://t.co/eNEiADQGP0@iamRashmika @aryasukku #FahadhFaasil @ThisIsDSP @SukumarWritings @TSeries pic.twitter.com/TRipwCp5a2
— Mythri Movie Makers (@MythriOfficial) April 9, 2023