
பல வித்தியாசமான திருமண வீடியோ அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் மணமக்கள் மாலை மாற்றும் சடங்கு முடிந்து மிக மகிழ்ச்சியுடன் இருப்பதை காண முடிகிறது. இதனிடையே மகிழ்ச்சியை கட்டுபடுத்த முடியாத மணமகன் தனியாகவே நடனமாட ஆரம்பிக்கிறார். அதன்படி அவர் ஒரு இந்தி பாடலுக்கு நடனமாடுகிறார்.
அப்பாடல் வரிகள் மிகவும் வேடிக்கையாக இருப்பதால் அங்குள்ள விருந்தினர்கள் சிரிக்க தொடங்குகிறார்கள். மணமகனின் உண்மையான மனநிலையை வீடியோவில் தெள்ளத் தெளிவாக காண முடிகிறது. வீடியோவை பார்த்தால் மணப் பெண்ணுக்கே மாப்பிள்ளை ஏன் இப்படி ஆடுகிறார் என்பது புரியவில்லை என்பது போன்று தோன்றுகிறது. அங்கிருந்த மணமகனின் மாமனாருக்கு தன் மாப்பிள்ளையின் நடனத்தை பார்த்து மயக்கமே வந்துவிட்டது என ஒருவர் கமெண்ட் செய்து உள்ளார்.
View this post on Instagram