திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் தங்கபாண்டியன் என்பவர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் மாரியப்பன் என்பவர் புளியங்குடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு தங்க பாண்டியனும், மாரியப்பனும் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலி இருந்து அம்பை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வீரவநல்லூர் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளும், வேலியார்குளம் பகுதியை சேர்ந்த கருத்த பாண்டியன் என்பவர் ஓட்டி வந்த வேனும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மாரியப்பனும், தங்க பாண்டியனும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கினை விசாரித்து சேரன்மகாதேவி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் கருத்த பாண்டிக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், 2500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.