தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கௌதம் கார்த்திக். கடல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் தான் நடித்த ‌ பல நல்ல திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் தற்போது சிம்புவுடன் சேர்ந்து பத்து தல மற்றும் ஆகஸ்ட் 16 1947 போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரேவதி கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை என்.எஸ் பொன் குமார் இயக்கியுள்ள நிலையில், ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் வலி தெரியாம இருக்க அதைவிட அதிக வலி கொடுத்தாலே போதும் என்கிற வசனங்கள் இடம் பெற்றுள்ளது‌. மேலும் இந்த டிரைலர் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.