தமிழ் சினிமா உலகில் பிரபல நடிககையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவரின் நடிப்பு திறமையை பார்த்து இயக்குனர்கள் வெள்ளி திரையில் அறிமுகப்படுத்தினார்கள்.

இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், ஓ மணப்பெண்ணே, யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சென்ற வருடம் தனுஷ் உடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்ற ஜனவரி மாதம் தெலுங்கில் முதல் முறையாக இவர் நடிப்பில் கல்யாணமாம் கல்யாணம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் வருகின்ற 35 நாட்களில் பிரியா பவானி சங்கர் நடித்த மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கின்றது.

இப்படி ஒரு வாய்ப்பு வேற எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காது. அந்த வகையில் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த அகிலன் திரைப்படமும் இதன்பின் மார்ச் 30 சிம்பு, கௌதம் கார்த்திக் உடன் சேர்ந்து நடித்த பத்து தலை திரைப்படமும் ரிலீஸ் ஆகின்றது. இதன்பின் ஏப்ரல் 14ஆம் தேதி ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்த ருத்ரன் திரைப்படமும் ரிலீஸ் ஆகின்றது.