சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரை தற்போது நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். அதன்படி நீதிபதிகள் சுந்தரம் ஸ்ரீமதி, பாரதி சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களுக்கு தலைமை நீதிபதி டி. ராஜா பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.